டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (இனிமேல் "TML" என குறிப்பிடப்படுகிறது) உங்கள் தனிப்பட்ட தரவுகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளது. உங்கள் தனிப்பட்ட தரவைச் செயலாக்குவதில் உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பது எங்களின் ஒரு முக்கியமான கவலையாக இருப்பதால், நாங்கள் எங்கள் வணிகச் செயல்முறைகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவை பொருந்தக்கூடிய சட்ட விதிகளின்படி நாங்கள் செயலாக்குகிறோம்.
இந்த தனியுரிமைக் கொள்கையின் முக்கிய நோக்கம், எங்களால் சேகரிக்கப்பட்ட தனிப்பட்ட தரவின் தன்மை, அத்தகைய தரவைச் சேகரிப்பதன் நோக்கம் மற்றும் அதன் உபயோகம், அத்தகைய தரவுகளின் அடுத்தடுத்த செயலாக்கம் மற்றும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட தனிப்பட்ட தரவு தொடர்பான உங்கள் உரிமைகள் போன்ற தரவுகளை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருவதாகும். மேலும் இந்த தனியுரிமைக் கொள்கை உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பது தொடர்பான உங்கள் உரிமைகளையும் அமைத்து தருகிறது. இந்த தனியுரிமைக் கொள்கையானது TML சேகரிக்கும் உங்களைப் பற்றிய தகவல், அந்தத் தகவல் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது, பராமரிக்கப்படுகிறது, பகிரப்படுகிறது, பாதுகாக்கப்படுகிறது மற்றும் அதை நீங்கள் எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதைப்பற்றி விவரிக்கிறது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதியிலிருந்து ("EEA") . மின்னணு அல்லது காகிதம் உள்ளிட்ட எந்த ஒரு வடிவத்திலும் TML பெற்ற அனைத்து தனிப்பட்ட தரவுகளுக்கும் இது பொருந்தும். கீழே தரப்பட்ட தேதியில் இது நடைமுறைக்கு வரும் மற்றும் நடைமுறைக்கு வரும் தேதிக்குப் பிறகு உங்கள் தகவலை நாங்கள் பயன்படுத்துவதற்கு இது பொருந்தும்.
இந்த தனியுரிமைக் கொள்கையில் வழங்கப்பட்டுள்ளவற்றை தவிர, பொதுவாக, உங்கள் தனிப்பட்ட அடையாளத்தை வெளிப்படுத்தாமல், எங்கள் இணையதளத்துக்கு வருகை தரலாம்/பயன்படுத்தலாம். உங்களை அடையாளத்தை வெளிப்படுத்தாமல், இணையதளத்தைப் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை நிறைவேற்ற TML உங்களை அனுமதிக்கும், இது சட்டபூர்வமானது மற்றும் நடைமுறைப்படியானது. உங்களின் தேவைகளை திறமையாகப் பூர்த்தி செய்வதற்கும், வளைதள வருகையின் போது நீங்கள் கோரிய தயாரிப்புகள், சேவைகள் அல்லது தகவலுக்கான சிறந்த தகவலை வழங்குவதற்கும் வலைதளத்தின் சில பிரிவுகளுக்கு உங்கள் தனிப்பட்ட தரவு தேவைப்படலாம். எங்களின் வலைதளத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கீழே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் படித்து புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். வலைத்தளத்தை பயன்படுத்துவதில் நீங்கள் நிபந்தனையின்றி இந்த விதிமுறைகளை ஏற்றுக்கொள்வது அடங்கும். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் அதன் தனியுரிமைக் கொள்கையின்படி நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களையும் பயன்படுத்த தானாக முன்வந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே மட்டுமே நீங்கள் இந்த வலைதளத்தை அணுகலாம். எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றால் அல்லது வலைதளங்கள் மற்றும்/அல்லது அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக ஏதேனும் காரணத்திற்காக அதிருப்தி அடைந்தால், நீங்கள் வலைதளத்தை மேலும் அணுகுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
இந்த தனியுரிமைக் கொள்கையைப் படிக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்
நாங்கள் சேகரிக்கும் தனிப்பட்ட தரவு
தனிப்பட்ட தரவு என்பது, நீங்கள் யார் என்ற விவரங்களை TML அறிய அனுமதிக்கும் தரவு ஆகும் மற்றும் உங்களை அடையாளம் காண, (உம். பெயர், வயது, பாலினம், அஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை).தொடர்பு கொள்ள அல்லது கண்டறியப் பயன்படும். கருத்துக்கணிப்புக்கு பதிலளிக்கும் போது, நிகழ்வுகளுக்குப் பதிவுசெய்யும் போது, தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளுக்குப் பதிவுசெய்யும்போது, தயாரிப்பு பற்றிய தகவலைக் கோரும்போது அல்லது எங்கள் சேவைகளைப் பயன்படுத்தும் போது அல்லது வாடிக்கையாளர் ஆதரவைக் கோரும் போது போன்ற சூழ்நிலைகளில். நீங்கள் வழங்க்கும் உங்களின் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கிறோம். உங்கள் பெயர், முகவரி, அஞ்சல் குறியீடு, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, IP முகவரி, இருப்பிடத் தரவு, உங்கள் சாதனத்தைப் பற்றிய தகவல் போன்ற சூழ்நிலைகளுடன் தொடர்புடைய உங்களின் தனிப்பட்ட தரவை வழங்குமாறு நாங்கள் உங்களை கேட்கலாம். TML உங்களைப் பற்றி வைத்திருக்கும் அனைத்து தனிப்பட்ட தரவுகளும் எப்போதும் உங்களிடமிருந்து நேரடியாக வருவதாக இருக்காது. உதாரணமாக, இது உங்கள் முதலாளி அல்லது நீங்கள் சேர்நதிருக்கும் பிற நிறுவனங்களிடமிருந்து வரக்கூடும். எனினும், இந்த தளத்துடன் நீங்கள் தொடர்பு கொள்ளும்போது மற்றும்/அல்லது இந்தத் தளத்தில் வழங்கப்படும் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவை TML சேகரிக்கிறது. உதாரணமாக:
- இந்தத் தளத்தின் மூலம் நீங்கள் ஒரு வேலை அல்லது பிற பணி வாய்ப்புக்கு விண்ணப்பித்தால், உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவதுடன், உங்களின் மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் மற்றும் அஞ்சல் முகவரி போன்ற பிற தொடர்புத் தகவல்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். நீங்கள் குறிப்பிடும் வேலை வாய்ப்புக்காக உங்களைப் பரிசீலிக்க இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்துவோம். மேலும், இந்தத் தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள மற்ற பணி வாய்ப்புகள் ஆகிய இரண்டு வாய்ப்புகள் குறித்தும் உங்களைத் தொடர்புகொள்ள இந்தத் தகவலை நாங்கள் பயன்படுத்தலாம்.
- எங்கள் தளத்தின் சில அம்சங்களில் எங்களுக்கு உதவ மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரை நாங்கள் பயன்படுத்தலாம். எங்கள் சேவை வழங்குநர் எங்கள் சார்பாக உங்கள் தகவலைப் பெறுவார் மற்றும் வேறு எந்த தேவைக்காகவும் அதைப் பயன்படுத்த அவர் அனுமதிக்கப்பட மாட்டார்
- நீங்கள் ஒரு கருத்துக்கணிப்புக்கு பதிலளிக்கும் போது மற்றும் இந்தத் தளத்தில் வழங்கப்படும் சேவைகள் ஓரு பிரச்சினை குறித்து புகாரளிப்பது உட்பட, இந்த இணையதளத்துடன் நீங்கள் மேற்கொள்ளும் பிற தொடர்புகள் பற்றிய தனிப்பட்ட தரவையும் நாங்கள் உங்களிடம் கேட்கலாம்,
- டீலர்ஷிப் / டிஸ்ட்ரிபியூட்டர்ஷிப் (டீலர் / டிஸ்ட்ரிபியூட்டர் அப்ளிகேஷன்கள் மூலம்) பாணியில் நீங்கள் எங்களுடன் வணிகம் செய்ய விரும்பினால், உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிப்போம்.
- மேலும், நாங்கள் ஆர்வமுள்ளதாக கருதும் சேவைகளை வழங்கவும், தரவு துல்லியத்தை பராமரிக்கவும், வழங்கவும் மற்றும் சேவைகளை மேம்படுத்தவும் எங்களுக்கு உதவ, எங்கள் கூட்டாளிகள், சேவை வழங்குநர்கள் மற்றும் பொதுவில் கிடைக்கும் இணையதளங்கள் போன்ற மூன்றாம் தரப்பினரிடமிருந்து தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்கிறோம்,
- கிரெடிட்/டெபிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு எண், வங்கிக் கணக்கு வகை, வங்கிப் பெயர்கள் உள்ளிட்ட கட்டணத் தகவல்கள். எங்களுடன் தொடர்புடைய பேமெண்ட் கேட்வேக்கள் மூலம் சேகரிக்கப்படலாம். அத்தகைய தரவு உங்கள் பரிவர்த்தனைகளைச் செயலாக்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.
- வாகன மாடல், ஆண்டு, நிறம், RTO பதிவு எண் உள்ளிட்ட வாகன விவரங்கள் மற்றும் வாரண்ட்டி விவரங்கள், டீலர் பெயர் மற்றும் வாங்கிய ஆண்டு ஆகியவற்றை உள்ளடக்கிய விற்பனை விவரங்கள்
- எங்கள் வலைதளத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பது பற்றிய விவரங்கள்
- இரகசிய சேமிப்பிடம், சிஸ்டம் செயல்பாடு, ஹார்டுவேர் அமைப்புகள், பிரவுசர் வகை, பிரவுசர் மொழி, உங்கள் வருகை தேதி மற்றும் நேரம், அந்தப் பக்கங்களில் செலவழித்த நேரம் மற்றும் பிற புள்ளிவிவரங்கள் மற்றும் ரெஃபரல் URL போன்ற சாதன நிகழ்வுத் தகவல்கள்
உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது பிற மூன்றாம் தரப்பினர் தொடர்பான உங்களின் தனிப்பட்ட தரவை எங்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த தனியுரிமைக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்கள் / பயன்பாடுகளுக்கென, அத்தகைய தனிப்பட்ட தரவை எங்களிடம் வெளியிடுவதற்கு, அத்தகைய உறவினர்கள், நண்பர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரிடம் இருந்து தகுந்த சம்மதத்தைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தி உத்தரவாதம் அளிக்கிறீர்கள்.
எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால் மற்றும் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் அதன் தனியுரிமைக் கொள்கையின்படி நீங்கள் வழங்கிய அனைத்து தகவல்களையும் பயன்படுத்த தானாகவே முன்வந்து ஒப்புதல் அளித்தால் மட்டுமே நீங்கள் இந்த இணையதளத்தை அணுக வேண்டும். மேலும், எங்கள் தனியுரிமைக் கொள்கையின் விதிமுறைகளை நீங்கள் ஏற்கவில்லை என்றாலோ அல்லது வலைதளங்கள் மற்றும்/அல்லது அதன் உள்ளடக்கங்கள் தொடர்பாக ஏதேனும் காரணத்திற்காக அதிருப்தி அடைந்தாலோ, நீங்கள் வலைதளத்தை அணுகுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
சமூக கலந்துரையாடல் குழுக்கள்
ஆன்லைன் சமூக கலந்துரையாடல் குழுக்கள், வலைப்பதிவுகள் அல்லது பிற வழிமுறைகள் மூலம் பயனர்கள் ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொள்ளும் திறனை எங்கள் வலைதளம் வழங்குகிறது. அத்தகைய கலந்துரையாடல் குழுக்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட விஷயங்களை நாங்கள் வடிகட்டவோ கண்காணிக்கவோ மாட்டோம். இந்த விவாதப் பலகைகளில் போஸ்ட் செய்வதை நீங்கள் தேர்வுசெய்தால், எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் வெளிப்படுத்தும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் அத்தகைய தகவல்கள் எங்கள் தனியுரிமைக் கொள்கையால் பாதுகாக்கப்படவில்லை அல்லது அத்தகைய இடுகைகள் மூலம் உங்கள் தனிப்பட்ட விவரங்களை வெளியிட நீங்கள் தேர்வுசெய்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மேலும், எங்கள் வலைதளத்தில் பிரசுரத்துக்கென நீங்கள் வெளியிடும் தனிப்பட்ட விவரங்கள் இணையம் மூலம் உலகம் முழுவதும் கிடைக்கலாம். இதுபோன்ற தகவல்களை மற்றவர்கள் பயன்படுத்துவதையோ அல்லது தவறாகப் பயன்படுத்துவதையோ எங்களால் தடுக்க இயலாது.
TML வலைதளங்களில் மற்ற வலைதளங்களுக்கான இணைப்புகள் இருக்கலாம். கீழே கொடுக்கப்பட்டவாறு இருந்தாலும் கூட, அத்தகைய வலைதளங்களின் இரகசியத்தன்மை அல்லது உள்ளடக்கத்திற்கு TML பொறுப்பாகாது:
எங்கள் வலைதளத்தில் உள்ள இணைப்புகளைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பு வலைதளத்தை அணுகியுள்ளீர்கள்; அல்லது
ஒரு மூன்றாம் தரப்பு வலைதளத்தில் இருந்து எங்கள் வலைதளத்துடன் இணைந்துள்ளீர்கள்.
உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்
எங்களிடம் சரியான காரணம் இருந்தால் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த முடியும். பின்வருபவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காரணங்களுக்காக மட்டுமே உங்கள் தரவைப் பயன்படுத்துகிறோம்:
- உங்களுடன் நாங்கள் வைத்திருக்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, அல்லது
- ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக உங்கள் தரவைப் பயன்படுத்த வேண்டிய சட்டப்பூர்வ கடமை எங்களுக்கு இருந்தால், அல்லது
- அதைப் பயன்படுத்த உங்கள் சம்மதத்தைப் பெறும்போது, அல்லது
- வணிக அல்லது வர்த்தக காரணங்களாக எங்களின் சட்டரீதியான நலன்களின்படி உங்கள் தரவை நாங்கள் உபயோகிக்கையிலும் கூட, நாங்கள் உங்களுக்குச் சிறந்ததை தருவோமேயன்றி, எங்களின் சட்டரீதியான நலன்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டோம்.
உங்கள் தகவலின் பயன்பாடு, நாங்கள் பயன்படுத்தும் நேரத்தில் நடைமுறையில் இருக்கும் தனியுரிமை அறிவிப்புக்கு உட்பட்டது. எங்கள் பொதுவான வணிக பயன்பாட்டிற்காக எங்களுக்கு வழங்கப்பட்ட தகவலை TML பயன்படுத்துகிறது. இதில் பின்வரும் நோக்கங்கள் உள்ளடங்கியிருக்கலாம்:
- உங்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பது;
- வாடிக்கையாளர் சேவை பிரச்சினைகள் உள்ளிட்ட சேவைகளை உங்களுக்கு வழங்குதல்;
- எங்கள் அல்லது எங்கள் துணை நிறுவனங்களின் தற்போதைய சேவைகள், நாங்கள் உருவாக்கி வரும் புதிய சேவைகள் அல்லது விளம்பரங்கள் மற்றும் உங்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றிய தகவல்தொடர்புகளை உங்களுக்கு அனுப்புதல்;
- எங்கள் சேவைகளில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சங்கள் அல்லது மேம்பாடுகள் குறித்து உங்களை எச்சரித்தல்
- நீங்கள் விசாரித்த வேலை அல்லது தொழில் வாய்ப்புகள் பற்றி உங்களுடன் தொடர்பு கொள்ளல்
- எங்கள் தளம் மற்றும் எங்கள் சேவைகள் உங்களுக்கு பயனுள்ள வகையில் செயல்படுவதை உறுதி செய்யல்;
- விளம்பரம் மற்றும் அணுகல் திறனை அளவிடல் அல்லது புரிந்து கொள்ளல்.
- வலைதளங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்கள், பயனர் ஒப்பந்தங்கள் மற்றும் கொள்கைகள் மற்றும்/ அல்லது பிற நிர்வாகத் தகவல்கள் தொடர்பான முக்கியமான தகவல்களை உங்களுக்கு அனுப்புதல்
- சந்தைப்படுத்தல் மற்றும் நிகழ்வுகள்: மின்னஞ்சல், தொலைபேசி, குறுஞ்செய்தி, நேரடி அஞ்சல் மற்றும் ஆன்லைன் போன்ற பல்வேறு தளங்களில் சந்தைப்படுத்தல் மற்றும் நிகழ்வு தகவல்தொடர்புகளை உங்களுக்கு வழங்க தனிப்பட்ட தகவலை நாங்கள் பயன்படுத்துகிறோம். நாங்கள் உங்களுக்கு மார்க்கெட்டிங் மின்னஞ்சலை அனுப்பினால், எதிர்காலத்தில் இந்த மின்னஞ்சல்களைப் பெறாமல் தவிர்ப்பதற்கான வழிமுறைகளும் அதில் இருக்கும். உங்களின் தகவல் மற்றும் சந்தைப்படுத்தல் விருப்பங்களை நிர்வகிப்பதற்கான மின்னஞ்சல் விருப்ப மையங்களையும் நாங்கள் பராமரிக்கிறோம். மார்க்கெட்டிங் மின்னஞ்சல்களைப் பெறுவதிலிருந்து நீங்கள் விலகினாலும், உங்கள் கணக்குகள் மற்றும் சந்தாக்கள் தொடர்பான முக்கியமான சேவைத் தகவலை நாங்கள் உங்களுக்கு அனுப்பலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.
- சாத்தியமான மீறல்களை விசாரிக்க அல்லது TML மற்றும் எங்கள் வலைத்தளத்தின் பயனர்களின் உரிமைகள், சொத்து அல்லது பாதுகாப்பைப் பாதுகாத்தல்.
- சட்டப்பூர்வ கடமைகள்: ஒரு குற்றத்தைத் தடுத்தல், கண்டறிதல் அல்லது விசாரணை ; இழப்பு தடுத்தல்; அல்லது மோசடி போன்ற சட்ட மற்றும் இணக்கக் காரணங்களுக்காக தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்தும் மற்றும் தக்கவைக்கும் தேவை எங்களுக்கு உண்டாகலாம். எங்கள் உள் மற்றும் வெளிப்புற தணிக்கைத் தேவைகள், தகவல் பாதுகாப்பு நோக்கங்கள் மற்றும் அவசியமான அல்லது பொருத்தமானது என நாங்கள் நம்புவதால், தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவோம்:
- நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே உள்ள சட்டங்கள் உள்ளிட்ட பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ்;
- நீதிமன்றங்கள், சட்ட அமலாக்க முகமைகள், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது மற்றும் அரசு அதிகாரிகளின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பது, நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே உள்ள அத்தகைய அதிகாரிகள் அதில் அடங்குவர்
உங்களுக்கான சேவைகளைச் செய்வதற்கு அல்லது உங்கள் விசாரணைகளுக்குப் பதிலளிக்க நியாயமான முறையில் அவசியமான தகவல்களை மட்டுமே சேகரிக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். நீங்கள் வழங்கும் தகவல் துல்லியமானது, முழுமையானது மற்றும் தற்போதையது என்பதை உறுதிப்படுத்துவது உங்களின் பொறுப்பு.
எங்கள் வலைதளம், மொபைல் App. அல்லது வேறு ஏதேனும் பயன்முறையில் உங்கள் தொடர்பு விவரங்களை வழங்குவதன் மூலம், மின்னஞ்சல், SMS, தொலைபேசி அழைப்பு மற்றும்/ அல்லது வாட்ஸ்அப் மூலம் TML அல்லது அதனுடன் தொடர்புடைய/ இணை நிறுவனத்திடமிருந்து தகவல்தொடர்புகளைப் பெற ஒப்புக்கொள்கிறீர்கள்.
TML இணையதளத்தின் முழு அல்லது எந்தப் பகுதிக்கும், தொடர்புடைய சேவைகள் அல்லது அதன் எந்தப் பகுதிக்கும் எந்த நேரத்திலும் முன்னறிவிப்பு இல்லாமல் உங்கள் அணுகலை நிறுத்துவதற்கான உரிமையை, TML தனது சொந்த விருப்பத்தின் பேரில் கொண்டுள்ளது.
நாங்கள் தனிப்பட்ட தரவைப் பகிரும்போது
சேவைகளை வழங்குவதற்கு அல்லது எங்கள் வணிகச் செயல்பாடுகளை நடத்துவதற்குத் தேவைப்படும்போது TML தனிப்பட்ட தரவைப் பகிர்கிறது அல்லது வெளிப்படுத்துகிறது. TML உங்களின் தனிப்பட்ட தரவை வெளியில் மாற்ற நினைத்தால், TML உங்கள் தனியுரிமை உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கும் மற்றும் போதுமான பாதுகாப்புகள் உள்ளதை உறுதிசெய்யும். உங்களைப் பற்றிய தனிப்பட்ட தரவுகளின் எந்த சிறப்பு வகைகளையும் நாங்கள் சேகரிப்பதில்லை (உங்கள் இனம் அல்லது இனப்பிரிவுகள், மதம் அல்லது தத்துவ நம்பிக்கைகள், பாலின வாழ்க்கை, பாலியல் நாட்டம், அரசியல் கருத்துக்கள், தொழிற்சங்க உறுப்பினர் நிலை, உங்கள் உடல்நலம் மற்றும் மரபணு மற்றும் பயோமெட்ரிக் தரவு பற்றிய விவரங்கள் இதில் அடங்கும்). குற்றவியல் தண்டனைகள் மற்றும் குற்றங்கள் பற்றிய எந்த தகவலையும் நாங்கள் சேகரிப்பதில்லை.
இந்த தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட பணி வாய்ப்புகளுக்கான உங்கள் விண்ணப்பம் அல்லது எங்கள் துணை நிறுவனங்களில் ஒன்றின் வலைதளத்தில் விளம்பரப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் தொடர்பாக, TML –உடன் இணைக்கப்படாத மூன்றாம் தரப்பு வாடிக்கையாளர்களுக்கு, உங்கள் சம்மதத்துடன், உங்களைப் பற்றிய தகவலை TML வெளிப்படுத்தலாம். உதாரணத்திற்கு-
- TML க்குள்: உலகெங்கிலும் உள்ள எங்கள் வணிகங்கள் பல்வேறு TML குழுக்கள் மற்றும் செயல்பாடுகளால் ஆதரிக்கப்படுகின்றன மற்றும் சேவைகள், கணக்கு நிர்வாகம், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் வணிக மற்றும் தயாரிப்பு மேம்பாடு ஆகியவற்றை வழங்குவதற்கான தேவை ஏற்பட்டால், தனிப்பட்ட தகவல்கள் அவர்களுக்கு வழங்கப்படும் எங்கள் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் தனிப்பட்ட தரவை கையாளும் போது எங்கள் தரவு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
- துணை நிறுவனங்கள்: எங்கள் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள், கூட்டு முயற்சிகள், குழுக்கள் மற்றும் இணை நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் மேலே குறிப்பிட்டுள்ள நோக்கங்களுக்காக இந்தத் தகவலைப் பயன்படுத்தலாம்
- டீலர்கள்: சுதந்திரமாகச் சொந்தமான மற்றும் இயக்கப்படும் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள். மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை, பூர்த்தி செய்தல் மற்றும் தொடர்புடைய நோக்கங்கள் உட்பட, தங்களின் அன்றாட வணிக நோக்கங்களுக்காக இந்தத் தகவலை அவர்கள் பயன்படுத்தலாம்.
- விநியோகஸ்தர்கள்: எங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள், அவை சுதந்திரமாகச் சொந்தமானவை மற்றும் இயக்கப்படுகின்றன. மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் சேவை, பூர்த்தி செய்தல் மற்றும் தொடர்புடைய நோக்கங்கள் உட்பட, தங்களின் அன்றாட வணிக நோக்கங்களுக்காக இந்தத் தகவலை அவர்கள் பயன்படுத்தலாம்
- எங்கள் வணிகப் பங்காளிகள்: இணை முத்திரையிடப்பட்ட சேவைகளை டெலிவரி செய்ய, உள்ளடக்கத்தை வழங்க அல்லது நிகழ்வுகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாங்கள் எப்போதாவது பிற நிறுவனங்களுடன் கூட்டாக ஒத்துழைக்கிறோம். இந்த ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக, நீங்கள் TML மற்றும் எங்கள் கூட்டாளிகள் இருவரின் வாடிக்கையாளராகவும் இருக்கலாம் மற்றும் நாங்கள் உங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துப் பகிரலாம். தனியுரிமை அறிவிப்புக்கு ஏற்ப TML தனிப்பட்ட தரவைக் கையாளும்.
- எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்: தேவைப்படும் ஏதேனும் ஆதரவுக்கென, உலகெங்கிலும் உள்ள சேவை வழங்குநர்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். மென்பொருள், சிஸ்டம் மற்றும் பிளாட்ஃபார்ம் ஆதரவு, நேரடி சந்தைப்படுத்தல் சேவைகள்; கிளவுட் ஹோஸ்டிங் சேவைகள்; விளம்பரம்; மற்றும் ஆர்டர் பூர்த்தி மற்றும் விநியோகம் போன்ற எங்களுக்கு அவர்கள் வழங்கும் சேவைகளை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படும் போது மட்டுமே இந்தத் தரப்புகளுக்கு தனிப்பட்ட தரவு கிடைக்கச் செய்யப்படலாம்; எங்கள் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள் எங்களுக்கு சேவைகளை வழங்குவதைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் நாங்கள் அவர்களுக்குக் கிடைக்கும் தனிப்பட்ட தரவைப் பகிரவோ பயன்படுத்தவோ அனுமதிக்கப்படுவதில்லை. மேலும், ஒருவேளை உங்கள் தனிப்பட்ட விவரங்களைச் செயலாக்குவதை மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களிடம் நாங்கள் ஒப்படைத்தால், பொருத்தமான அல்லது உகந்த தொழில்நுட்ப மற்றும் ஃபிசிகல் பாதுகாப்புகளைப் பராமரிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களைத் தேர்ந்தெடுத்து, அத்தகைய மூன்றாம் தரப்பு சேவையைக் கட்டுப்படுத்தி மேற்பார்வையிடுவோம். சந்தைப்படுத்தல் நோக்கங்களுக்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்களை மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ அல்லது வாடகைக்கு விடவோ மாட்டோம். இருப்பினும், தரவு ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக நாங்கள் உங்கள் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்தலாம், அவை எங்கள் விருப்பப்படி மற்ற தரப்பினருக்கு விற்கப்படலாம். அத்தகைய தரவுத் தொகுப்பில் உங்கள் தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இருக்காது. மேலே குறிப்பிட்டுள்ள தரவைச் சேகரிக்கும் நோக்கத்தில் விவரிக்கப்பட்டுள்ள உங்களின் எந்த வகையான தனிப்பட்ட விவரங்களையும் நாங்கள் வழங்கலாம் மற்றும் உங்கள் முதல் பெயர், கடைசிப் பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், தெரு முகவரி போன்ற "சிறப்பு கவனிப்புக்குத் தேவையான தனிப்பட்ட தகவல்கள்" தவிர. , நகரம், மாநிலம், மாகாணம் பிராந்தியம், குக்கீகள் மற்றும் மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கான IP முகவரி போன்றவற்றை, உங்கள் அனுமதியின்றி மின்னஞ்சல்கள், இணையம் போன்றவற்றின் மூலம் எங்களுக்கு சேவைகளை வழங்க நாங்கள் பணியமர்த்துகிறோம். அத்தகைய பாதுகாப்புகளின் நகலை நீங்கள் பெற விரும்பினால் அல்லது மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுக்கு உங்கள் தனிப்பட்ட விவரங்களை வழங்குவதை நிறுத்த விரும்பினால், உங்கள் கோரிக்கையுடன் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பவும். எந்தவொரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுக்கும் உங்களின் தனிப்பட்ட விவரங்களை வழங்கும்போது அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்து தனிப்பட்ட விவரங்களைப் பெறும்போது, அத்தகைய ஏற்பாடு அல்லது ரசீதை நாங்கள் பதிவு செய்கிறோம். மேலும், எந்தவொரு மூன்றாம் தரப்பினரிடமிருந்தும் தனிப்பட்ட விவரங்களைப் பெறும்போது, அத்தகைய தனிப்பட்ட விவரங்களைப் பெறுவதற்கான சூழ்நிலைகளை நாங்கள் சரிபார்க்கிறோம்.
- சட்டப்பூர்வ காரணங்களுக்காக மூன்றாம் தரப்பினர்: பின்வருபவை போன்ற தனிப்பட்ட தரவுகள் தேவை என்று நாங்கள் நம்பும் போது அதைப் பகிர்ந்து கொள்வோம்:
- சட்டப்பூர்வ கடமைகளுக்கு இணங்கவும், சட்ட அமலாக்க மற்றும் பிற பொது அதிகாரிகள் உட்பட அரசு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்கும். இவர்களில் நீங்கள் வசிக்கும் நாட்டிற்கு வெளியே உள்ள அத்தகைய அதிகாரிகளை அடங்குவர்.
- ஒரு இணைப்பு, விற்பனை, மறுகட்டமைப்பு, கையகப்படுத்தல், கூட்டு முயற்சி, ஒதுக்குதல், பரிமாற்றம் அல்லது எங்கள் வணிகம், சொத்துக்கள் அல்லது பங்குகளின் அனைத்து அல்லது எந்தப் பகுதியையும் மாற்றியமைத்தல் (எந்தவொரு திவால் அல்லது அதுபோன்ற நடவடிக்கைகள் உட்பட)
- எங்கள் உரிமைகள், பயனர்கள், அமைப்புகள் மற்றும் சேவைகளைப் பாதுகாக்க
நாம் எங்கு தனிப்பட்ட தரவைச் சேமித்து செயலாக்குகிறோம்?
உலகளாவிய அமைப்பாக TML, இந்தத் தனியுரிமை அறிவிப்பு மற்றும் தரவு எங்கிருந்தாலும் பொருந்தக்கூடிய சட்டத்தின் தேவைகளின்படி நாங்கள் சேகரிக்கும் தகவல் செயலாக்கப்படுவதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்கிறோம். TML ஆனது நெட்வொர்க்குகள், தரவுத்தளங்கள், சர்வர்கள், அமைப்புகள், ஆதரவு மற்றும் உலகெங்கிலும் உள்ள எங்கள் அலுவலகங்களில் உள்ள ஹெல்ப் டெஸ்க்குகளை கொண்டுள்ளது. எங்கள் வணிகம், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உலகெங்கிலும் உள்ள கிளவுட் ஹோஸ்டிங் சேவைகள், சப்ளையர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற மூன்றாம் தரப்பினருடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். தனிப்பட்ட தரவு செயல்படுத்தப்படுவதையும், பாதுகாக்கப்படுவதையும், பொருந்தக்கூடிய சட்டத்தின்படி மாற்றப்படுவதையும் உறுதிசெய்ய நாங்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
TML உங்கள் தனிப்பட்ட தரவை யாருக்கும் விற்காது அல்லது வாடகைக்கு எடுக்காது. நீங்கள் கோரிய தயாரிப்பு அல்லது சேவையை வழங்குவது போன்ற சில சந்தர்ப்பங்களில், உங்கள் தனிப்பட்ட தரவை TML க்குள் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு தேவைப்பட்டால் நாங்கள் வெளியிட வேண்டியிருக்கலாம். உங்கள் சொந்த நாட்டில் உள்ள அதே அளவிலான தரவுத் தனியுரிமைப் பாதுகாப்பை அளிக்கும் பொருந்தக்கூடிய சட்டங்கள் வழங்காத பிற நாடுகளுக்கு தனிப்பட்ட தகவல்களை நாங்கள் மாற்றும்போது, பொருத்தமான அளவிலான தரவுத் தனியுரிமைப் பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுப்போம். எடுத்துக்காட்டாக, அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்த விதிகள், பலதரப்பு தரவு பரிமாற்ற ஒப்பந்தங்கள், உள்குழு ஒப்பந்தங்கள் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவலைப் பெறுபவர்கள் அதைப் பாதுகாப்பதை உறுதிபடுத்த, வடிவமைக்கப்பட்ட பிற நடவடிக்கைகளை நாங்கள் பயன்படுத்துகிறோம்.
எவ்வாறு தனிப்பட்ட தரவை நாங்கள் பாதுகாப்போம்
உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க பொருத்தமான தொழில்நுட்பங்களையும் நடைமுறைகளையும் TML பயன்படுத்துகிறது. பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச தரங்களுடன் எங்கள் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளன, மேலும் எங்கள் வணிகத் தேவைகள், தொழில்நுட்பத்தில் மாற்றங்கள் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தேவையானவை தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படுகின்றன. உதாரணமாக,
- கொள்கைகள் மற்றும் நடைமுறைகள்: உங்கள் தனிப்பட்ட தரவை இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், மாற்றம் செய்தல் அல்லது தற்செயலான அழிவிலிருந்து பாதுகாக்கும் நோக்கத்துடன் நியாயமான தொழில்நுட்ப, உடல் மற்றும் செயல்பாட்டு பாதுகாப்பு நடைமுறைகளை TML பயன்படுத்துகிறது. உங்களைப் பற்றி சேகரிக்கப்படும் அனைத்து தரவுகளுக்கும் பொருத்தமான பாதுகாப்பை வழங்கும் முயற்சியில் எங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது மதிப்பாய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும்.
- உங்கள் தனிப்பட்ட தரவை அணுகுவதற்கு நாங்கள் பொருத்தமான கட்டுப்பாடுகளை விதிக்கிறோம்.
- தரவைப் பாதுகாப்பாகச் சேமித்து இடமாற்றம் செய்ய, கண்காணிப்பு மற்றும் உடல்ரீதியான நடவடிக்கைகள் உட்பட பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நாங்கள் செயல்படுத்துகிறோம்
- தனிப்பட்ட தரவை அணுகக்கூடிய எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு, தனியுரிமை, தகவல் பாதுகாப்பு மற்றும் பொருந்தக்கூடிய பிற பயிற்சிகள், தேவைப்படுகின்றன
- எங்கள் தகவல் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய ஒப்பந்த நிபந்தனைகளின்படி எங்கள் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் செயல்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம்.
- எங்கள் மூன்றாம் தரப்பு விற்பனையாளர்கள் மற்றும் வழங்குநர்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பாய்வுகளுடன், எங்கள் பாதுகாப்புக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட எந்தவொரு தனிப்பட்ட தரவையும் பாதுகாக்க வேண்டும்.
குக்கீஸ்
அவ்வப்போது, நாம் "குக்கீ" எனப்படும் நிலையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். குக்கீ என்பது கணினி அல்லது பிற சாதனத்தில் உபயோகிக்கப்படும் ஒரு சிறிய உரைக் கோப்பாகும் மற்றும் இது பயனர் அல்லது சாதனத்தை அடையாளம் காணவும், தகவலைச் சேகரிக்கவும் உபயோகிக்கப்படுகிறது. குக்கீகள் பொதுவாக அவற்றின் செயல்பாடு மற்றும் நோக்கத்தைப் பொறுத்து நான்கு வகைகளில் ஒன்றுக்கு ஒதுக்கப்படுகின்றன : தேவையான குக்கீகள், செயல்திறன் குக்கீகள், செயல்பாட்டு குக்கீகள் மற்றும் மார்க்கெட்டிங் நோக்கங்களுக்கான குக்கீகள். ஒரு குக்கீ உங்களின் ஹார்டு டிரைவிலிருந்து இருந்து வேறு எந்த தரவையும் மீட்டெடுக்கவோ, கணினி வைரஸ்களை அனுப்பவோ அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரியை பெறவோ முடியாது. தற்சமயம், பயனரின் வருகையை அதிகரிக்க வலைதளங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகின்றன; பொதுவாக, குக்கீகள் பயனரின் ஐடி மற்றும் கடவுச்சொல்லைப் பாதுகாப்பாகச் சேமித்து வைக்கலாம், முகப்புப் பக்கங்களைத் தனிப்பயனாக்கலாம் மற்றும் தளத்தின் எந்தப் பகுதிகளுக்கு பயனர் சென்றார் என்பதைக் கண்டறியலாம். குக்கீ எப்போது வைக்கப்பட்டது என்பதை உங்களுக்குத் தெரிவிக்குமாறு உங்கள் பிரவுசரை அமைக்கலாம். இவ்வாறாக, குக்கீயை ஏற்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. எங்கள் பார்வையாளர்கள் இந்த இணையதளத்தை எப்படி, எப்போது பயன்படுத்துகிறார்கள் என்பதைக் காண்பிப்பதன் மூலம், இந்தத் தகவல் எங்கள் தளத்தை தொடர்ந்து முறையாக மேம்படுத்த உதவும். நீங்கள் குறிப்பாக எங்களுக்குக் கூடுதல் தகவல்களைத் தராதவரை, குக்கீகள் உங்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை எங்களிடம் எதுவும் கூறாது. எங்களிடமிருந்தோ அல்லது மூன்றாம் தரப்பினரிடமிருந்தோ பெறப்பட்ட தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய எந்தவொரு தகவலுடனும் எங்கள் குக்கீ தகவலை TML இணைக்கவோ அல்லது தொடர்புபடுத்தவோ செய்யாது
நாம் குக்கீகளைப் பின்வருபவற்றுக்கென பயன்படுத்தலாம்: (i) வலைதளத்துக்கான உங்கள் வருகைகளின் எண்ணிக்கையை கணக்கிடுங்கள்; (ii) வலைதளப் பயன்பாட்டில் அநாமதேய, ஒட்டுமொத்த, புள்ளிவிவரத் தகவல்களை சேமியுங்கள் ; (iii) உங்கள் தேவை அல்லது பார்வையிடும் வரலாற்றின்படி பொருத்தமான உள்ளடக்கத்தை வழங்குதல் ; மற்றும் (iv) உங்கள் கடவுச்சொல்லைச் சேமிக்கவும் (நீங்கள் அவ்வாறு செய்ய அனுமதித்தால் மட்டுமே). எனவே நீங்கள் எங்கள் தளங்களுக்குச் செல்லும் ஒவ்வொரு முறையும் அதை மீண்டும் உள்ளிட வேண்டிய அவசியமில்லை. மேலும் நீங்கள் குக்கீகளை முடக்கவும் செய்யலாம். உங்கள் பிரவுசர் விருப்பங்களை மாற்றியமைப்பதின் மூலம், நீங்கள் அனைத்து குக்கீகளையும் ஏற்கலாம் அல்லது நிராகரிக்கலாம் அல்லது குக்கீ அமைக்கப்படும் போது அறிவிப்பைக் கோரலாம்.
கண்டிப்பாக தேவையான குக்கீகள்
உள்ளடக்கத்தைக் காண்பித்தல், உள்நுழைதல், உங்கள் அமர்வைச் சரிபார்த்தல், சேவைகளுக்கான உங்கள் கோரிக்கைக்கு பதிலளித்தல் மற்றும் பிற செயல்பாடுகள் போன்ற வலைதளத்தின் சரியான செயல்பாட்டிற்கு இந்த குக்கீகள் அவசியம். குக்கீகளின் பயன்பாட்டை முடக்கும் வகையில் பெரும்பாலான வலைதள பிரவுசர்கள் அமைக்கப்படலாம். இருப்பினும், நீங்கள் இந்த குக்கீகளை முடக்கினால், எங்கள் வலைதளத்தில் உள்ள அம்சங்களை நீங்கள் சரியாக அல்லது முழுமையாக அணுக முடியாமல் போகலாம்.
குழந்தைகள்
நாங்கள் குழந்தைகளுக்கு நேரடியாக சேவைகளை வழங்குவதில்லை அல்லது அவர்களின் தனிப்பட்ட தகவல்களை முன்கூட்டியே சேகரிப்பதில்லை. பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள், குழந்தைகளின் அணுகல் மற்றும் TML தளத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணித்தல் உட்பட, குழந்தையின் நடத்தைக்கான அனைத்துப் பொறுப்பு மற்றும் சட்டப்பூர்வப் வழிகாட்டல்களை ஏற்றுக்கொண்டால், எங்கள் இணையதளத்தைப் பயன்படுத்த குழந்தைகளை அங்கீகரிக்கலாம்.
சரிபார்க்கக்கூடிய பெற்றோரின் அனுமதியின்றி குழந்தையின் தனிப்பட்ட தரவு சேகரிக்கப்பட்டதாக TML அறிந்தால், அத்தகைய தகவலை நீக்குவதற்கு TML பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கலாம். இருப்பினும், உங்கள் குழந்தை அவன் / அவளின் தரவை TML க்கு சமர்ப்பித்துள்ளதை நீங்கள் கண்டறிந்தால், மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்புவதன் மூலம் TML இன் தரவுத்தளத்திலிருந்து அத்தகைய தரவை நீக்குமாறு நீங்கள் கோரலாம். கோரிக்கையைப் பெற்றவுடன், TML அதன் தரவுத்தளத்திலிருந்து அத்தகைய தகவலை நீக்குவதை உறுதி செய்யும்
உங்களின் உரிமைகள் மற்றும் உங்களின் தனிப்பட்ட தரவு
உங்கள் தகவலை அணுகுவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான உங்களின் உரிமையை நாங்கள் மதிக்கிறோம், மற்றும் தகவலுக்கான கோரிக்கைகளுக்கு நாங்கள் பதிலளிப்போம். மேலும், பொருந்தக்கூடிய இடங்களில் உங்கள் தனிப்பட்ட தகவலைச் சரிசெய்வோம், திருத்துவோம் அல்லது நீக்குவோம்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இந்த உரிமைகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் அடையாளச் சான்றுடன் நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
- தகவல்களை அணுகுவதற்கான உரிமை: எந்த நேரத்திலும் நீங்கள் எங்களிடம் வைத்திருக்கும் தகவலைக் கோருவதற்கும், ஏன் அந்த தகவலை வைத்துள்ளோம், யார் அந்த தகவலை அணுகலாம் மற்றும் எங்கிருந்து அந்த தகவலை பெற்றோம் என்பதை அறிய எங்களைத் தொடர்பு கொள்ளலாம், உங்கள் கோரிக்கையைப் பெற்றவுடன் நாங்கள் ஒரு மாதத்திற்குள் பதிலளிப்போம். முதல் கோரிக்கைக்கு கட்டணம் அல்லது கட்டணங்கள் எதுவும் இல்லை ஆனால் அதே தரவுக்கான கூடுதல் கோரிக்கைகள் நிர்வாகக் கட்டணத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். அணுகலைக் கோருவதற்கு ஒரு காரணத்தை நீங்கள் கூற வேண்டிய அவசியமில்லை. ஆனால் உங்கள் அடையாளத்திற்கான நியாயமான சான்றை நீங்கள் வழங்குவது அவசியம்.
- தகவலைச் சரிசெய்து புதுப்பிப்பதற்கான உரிமை: நாங்கள் உங்களிடம் வைத்திருக்கும் தரவு காலாவதியானதாகவோ, முழுமையடையாததாகவோ அல்லது தவறாகவோ இருந்தால், நீங்கள் எங்களுக்குத் தெரிவிக்கலாம், உங்கள் தரவு புதுப்பிக்கப்படும்
- உங்கள் தகவலை அழிக்கும் உரிமை: நாங்கள் இனி உங்கள் தரவைப் பயன்படுத்தக்கூடாது அல்லது உங்கள் தரவை சட்டவிரோதமாகப் பயன்படுத்துகிறோம் என்று நீங்கள் நினைத்தால், நாங்கள் வைத்திருக்கும் தரவை அழிக்குமாறு நீங்கள் கோரலாம். உங்கள் கோரிக்கையை நாங்கள் பெற்றதும், தரவு நீக்கப்பட்டதா அல்லது அப்படி செய்யப்படா விட்டால், அவ்வாறு அதை நீக்க முடியாத காரணத்தை நாங்கள் உறுதி செய்வோம் (உதாரணமாக, எங்கள் நியாயமான நலன்கள் அல்லது ஒழுங்குமுறை நோக்கங்களுக்காக இது எங்க்களுக்காக தேவைப்படுவதால்).
- செயலாக்கத்திற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் உரிமை: உங்கள் தரவைச் செயலாக்குவதை நிறுத்துமாறு கோர உங்களுக்கு உரிமை உள்ளது. கோரிக்கையைப் பெற்றவுடன், நாங்கள் உங்களைத் தொடர்புகொண்டு, எங்களால் உங்கள் கோரிக்கைக்கு இணங்க முடியுமா அல்லது உங்கள் தரவைத் தொடர்ந்து செயலாக்குவதற்கு நியாயமான காரணங்கள் எங்களிடம் உள்ளதா என்று உங்களுக்குத் தெரிவிப்போம். ஆட்சேபணை செய்வதற்கான உங்கள் உரிமையைப் பயன்படுத்திய பிறகும், உங்களின் பிற உரிமைகளுக்கு இணங்கவும் அல்லது சட்டப்பூர்வ உரிமைகோரல்களைக் கொண்டுவர அல்லது பாதுகாக்கவும் உங்கள் தரவை நாங்கள் தொடர்ந்து வைத்திருக்கலாம்.
- தரவு பெயர்வுத்திறனுக்கான உரிமை: உங்களின் சில தரவுகளை வேறொரு கட்டுப்படுத்திக்கு மாற்றுமாறு கோர உங்களுக்கு உரிமை உள்ளது. உங்கள் கோரிக்கையைப் பெற்ற ஒரு மாதத்திற்குள், சாத்தியமான இடங்களில் அவ்வாறு செய்ய, நாங்கள் உங்கள் கோரிக்கைக்கு இணங்குவோம்.
- உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கான உரிமை எந்த நேரத்திலும் ஒப்புதல் கோரப்பட்ட தரவுகளின் செயலாக்கத்திற்கான உங்கள் ஒப்புதலை திரும்பப் பெறுவதற்கான உரிமை. தொலைபேசி, மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் உங்கள் ஒப்புதலை எளிதாக திரும்பப் பெறலாம் (ஒப்புதலை திரும்பப் பெறும் படிவத்தைப் பார்க்கவும்).
- பொருந்தக்கூடிய இடங்களில் தனிப்பட்ட தரவுகளின் செயலாக்கத்தை எதிர்க்கும் உரிமை
- தரவுப் பாதுகாப்புப் பிரதிநிதியிடம் புகார் தாக்கல் செய்யும் உரிமை
- எந்த நேரத்திலும் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம், எந்த நேரத்திலும் மார்க்கெட்டிங் செய்திகளை அனுப்புவதை நிறுத்தும்படி எங்களிடமோ அல்லது மூன்றாம் தரப்பினரிடமோ கூறலாம். இந்த மார்க்கெட்டிங் செய்திகளைப் பெறுவதில் இருந்து நீங்கள் விலகினால், தயாரிப்பு/சேவை கொள்முதல், வாரண்ட்டி பதிவு, தயாரிப்பு/சேவை அனுபவம் அல்லது பிற பரிவர்த்தனைகளின் விளைவாக எங்களுக்கு வழங்கப்பட்ட தனிப்பட்ட தரவுகளுக்கு இது பொருந்தாது.
- எங்களிடமிருந்து அல்லது எங்கள் துணை நிறுவனங்களிடமிருந்து மேலும் மின்னஞ்சல் கடிதங்களைப் பெறுவதை நீங்கள் எப்போதும் விலக்கிக்கொள்ளலாம். எங்கள் வணிகத்தின் விற்பனை அல்லது பரிமாற்றம் அல்லது எங்கள் நிறுவனம் திவால்நிலைக்குத் தாக்கல் செய்தால் தவிர, உங்கள் அனுமதியின்றி உங்கள் மின்னஞ்சல் முகவரியை எந்த இணைக்கப்படாத மூன்றாம் தரப்பினருக்கும் விற்கவோ, வாடகைக்கு எடுக்கவோ அல்லது வர்த்தகம் செய்யவோ மாட்டோம்.
எவ்வளவு காலம் உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் வைத்திருக்கலாம்?
சட்டப்பூர்வ அல்லது வணிக நோக்கங்களுக்காக நாங்கள் நியாயமான முறையில் தேவைப்படும் வரை தனிப்பட்ட தகவல்களைத் தக்க வைத்துக் கொள்கிறோம். தரவு தக்கவைப்பு காலங்களை நிர்ணயிப்பதில், உள்ளூர் சட்டங்கள், ஒப்பந்தக் கடமைகள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகள் ஆகியவற்றை TML கருத்தில் கொள்கிறது. தனிப்பட்ட தகவல்கள் தேவைப்படாதபோது, பாதுகாப்பாக நீக்கிவிடுவோம் அல்லது அழித்து விடவும்.
மாற்றங்கள்
TML தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். தற்போதைய தனியுரிமைக் கொள்கையை சரி பார்க்க எங்கள் வலைதளத்தை அடிக்கடி பார்க்குமாறு நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம், இதன்மூலம் TML உங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துகிறது மற்றும் பாதுகாக்கிறது என்பதை நீங்கள் தொடர்ந்து அறிந்துகொள்ளலாம். இந்தக் கொள்கையில் மாற்றம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் போதெல்லாம், இந்த வலைதளத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை நாங்கள் விடுப்போம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட செயலாக்க தேதியை வழங்குவோம்.
வழங்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு
எங்களுக்கு வழங்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்காக எங்களிடம் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளன. அனைத்து தனிப்பட்ட தகவல்களையும் பாதுகாப்பான முறையில் சேமித்து வைத்து, அதன் இழப்பு, தவறாகப் பயன்படுத்துதல், தவறாக வெளிப்படுத்துதல், மாற்றம் அல்லது அழிவு ஆகியவற்றைத் தடுக்கிறோம். குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் அவ்வப்போது புதுப்பிக்கப்படும். எனினும், அத்தகைய தகவல்களின் எதிர்பாராத இழப்பு, தவறான உபயோகிப்பு அல்லது வெளிப்படுத்தல் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களின் இணைய பரிமாற்றத்தின் போது பாதுகாப்பு மீறலுக்கு TML பொறுப்பல்ல. மேலும், இந்தத் தனியுரிமைக் கொள்கையில் உள்ள எந்தவொன்றின் இழப்பு, சேதம் அல்லது தனிப்பட்ட தகவலை தவறாகப் பயன்படுத்துதல் போன்றவற்றுக்கு வலுக்கட்டாயமான ஒரு நிகழ்வு அல்லது நீங்கள் காரணமாக இருந்தால், அவற்றுக்கு TML பொறுப்பேற்காது.
TML.-ன் சட்டபூர்வ உரிமைகள் அல்லது அறிவுசார் சொத்துரிமைகளை பாதுகாக்க, சட்டப்பூர்வ கடமைக்கு இணங்கி அல்லது ஏதேனும் சட்டம் அல்லது எந்த ஒரு தகுதிவாய்ந்த நீதிமன்றம் அல்லது சட்டபூர்வ அதிகார அமைப்பின் தேவை காரணமாக, ஒரு நல்ல நம்பிக்கையில் உங்களின் தனிப்பட்ட தரவை TML வெளியிடலாம்.
உங்களின் கடமைப்பொறுப்புக்கள்
இந்த பயன்பாட்டு விதிமுறைகளால் சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட அல்லது தடைசெய்யப்பட்ட எந்தவொரு நோக்கத்திற்காகவும் வலைதளத்தைப் பயன்படுத்த மாட்டீர்கள் என்று TML க்கு உத்தரவாதம் அளிக்கிறீர்கள். இந்த வலைதளத்தை சேதப்படுத்தும், முடக்கும், அதிக சுமை உண்டாக்கும் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அல்லது இந்த வலைதளத்தை உபயோகித்து மகிழும் பிற தரப்பினருடன் குறுக்கிடும் விதத்தில் இந்த வலைதளத்தை நீங்கள் உபயோகிக்க கூடாது. TML வலைதளத்தில் இருந்து வழித்தோன்றல் படைப்புகளை. எங்களின் முன் அனுமதியின்றி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு ஊடகத்திலும் நீங்கள் மாற்றியமைக்கவோ, நகலெடுக்கவோ, விநியோகிக்கவோ, அனுப்பவோ, காட்சிப்படுத்தவோ, மறுஉருவாக்கம் செய்யவோ, வெளியிடவோ, உரிமம் வழங்கவோ, உருவாக்கவோ, மாற்றவோ அல்லது விற்கவோ கூடாது. இந்த பொருட்கள் அல்லது அதன் எந்த பகுதியையும் தனிப்பட்ட மற்றும் வணிக ரீதியான பயன்பாட்டிற்கு தவிர, வேறு எதற்கும் கணினியில் சேமிக்கப்படக்கூடாது.
ஆளும் சட்டம்/ அதிகார வரம்பு
இந்தியாவின் சட்டங்களால் இந்த தனியுரிமைக் கொள்கை நிர்வகிக்கப்படும்; மற்றும் மும்பை நீதிமன்றங்கள் (இந்தியா) அதன் மீது எழும் எந்தவொரு சர்ச்சையையும் விசாரிக்க பிரத்யேக அதிகார வரம்பைக் கொண்டிருக்கும்.
கேள்விகள்/ தொடர்புத் தகவல்
இந்த தனியுரிமை அறிவிப்புக் கொள்கை தொடர்பாக உங்களிடம் கேள்விகள் அல்லது கருத்துகள் இருந்தால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ளவும்: :
மின்னஞ்சல்: [email protected]
நடைமுறைப்படுத்தும் தேதி: 23.03.22