டாடா இன்ட்ரா என்பது, காண்பதற்கு அதிகப்படியான அழகுடனும், உறுதி மற்றும் நம்பகத்தன்மையை ஒன்றிணைக்கும், வணிகம் சார்ந்த வாகனங்களுக்கான TML -இன் புதிய 'பிரீமியம் டஃப்' வடிவமைப்பு தத்துவத்தின் மீது உருவாக்கப்பட்ட ஓர் டிரக். இன்ட்ரா V10, மிதமான சுமை மற்றும் மிதமான தூரப் பயன்பாடுகளில் தங்கள் வாகனங்களை இயக்கும் வாடிக்கையாளர்களுக்கானது.

இன்ட்ரா V10, அந்தப் பிரிவில் 43% தரத்தன்மையுடன் 33 kW (44 HP) ஆற்றலையும், 110 Nm திறனையும் உற்பத்தி செய்யும் புதிய BSVI இணக்கமான DI எஞ்சினைக் கொண்டுள்ளது. இந்தப் வாகனமானது வாடிக்கையாளர்கள் இந்த பிரிவில் சிறந்த எரிபொருள் திறனைப் பெறுவதை உறுதி செய்யும் எக்கோ ஸ்விட்ச் மற்றும் கியர் ஷிஃப்ட் அட்வைசருடன் (GSA) வருகிறது.

மின் ஆற்றல் உதவியில் இயங்கும் ஸ்டீயரிங் (EPAS), திசைமாற்றும் முயற்சியை குறைத்து இலகுவாக்குவதோடு வாகனத்தின் கட்டுப்படுத்தப்பட்ட இயக்கத்தையும் மிகவும் எளிதாக்குகிறது. 4.75 m TCR மற்றும் சிறிய ஃபுட்பிரிண்டானது, மிகவும் நெரிசலான நகரச் சாலைகளிலும் கூட இதைப் பயன்படுத்துவதை எளிதாக்குகிறது.

சேஸ் சட்டமானது, உயர் தரம் மற்றும் உறுதியை வழங்கும் ஹைட்ரோ ஃபார்மிங் செயல்முறை மற்றும் நவீன ரொபோட்டிக் வசதிகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டுள்ளது. குறைவான வெல்டிங் இணைப்புகள் என்பது, அதிகக் கட்டமைப்பு வலிமை, அதிக ஆயுள் மற்றும் குறைவான NVH அளவுகளைக் குறிக்கிறது.

அளவுள்ள அதன் பெரிய சுமையேற்றும் பகுதி, மேம்படுத்தப்பட்ட சுமை சுமக்கும் திறனுக்காக லீஃப் ஸ்பிரிங்குகளுடனான முன்புற மற்றும் பின்புறக் கடினமான அச்சுடன், V10, அதன் உரிமையாளர்களுக்கு அதிக இலாபம் மற்றும் சேமிப்பை உறுதிசெய்கிறது.

தகவல் பதிவிறக்கம் செய்க

எக்ஸ்-ஷோரூம் விலை*

* காட்டப்படும் விலைகள் சுட்டிக்காட்டும் மற்றும் மாற்றத்திற்கு உட்பட்டவை